உதவுங்கள்

இனிய நண்பர்களே !

எங்களை பற்றி:

வேர்கள் அறக்கட்டளை நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு, நாமும் உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை உடைய நண்பர்களால் உருவாக்க பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். வேண்டியவர்க்கு உணவு, கல்வி உதவி, ஆளுமை திறன் பயிற்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் நாங்கள், இரத்த தானம், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பயிற்சிகள் ஆகியவையும் நலிந்தோர்க்கு சென்று சேர ஆவலுடன் பணியற்றி வருகிறோம்.

தற்போதைய செயல்பாடுகள்:

• ஆதரவற்றோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்களில் அடைக்கலமாய் இருப்பவர்களுக்கு, உணவு வழங்குவது, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் தனித்து விடப்படவில்லை, அவர்களுக்கு நாங்களும் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது. தமிழ் புத்தாண்டு தினம், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று,திருவள்ளுவர் குருகுலம், சத்யஜோதி கருணை இல்லம், அன்னை தெரசா இல்லம், ஆகியவற்றில் உணவு ஏற்பாடு செய்தது.
• குழந்தை தொழிலாளர்களை கொத்தடிமையிலிருந்து மீட்பதும், அவர்கள் முறையான கல்வி, மற்றும் குழந்தைபருவத்தை திரும்ப பெற உதவுவது. இதுவரை 83 மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி உதவெ செய்து வருகிறோம்.
• குழந்தை தொழிலாளர் முறையிலிருந்து மீண்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு விடுபட்ட கல்வியாண்டுகளை பெற உதவும் 3 வேர்கள் கல்வி மையங்களை நடத்துவது,
• தேர்வுகளை சிறப்பாக எழுத , வளர் இளம் பருவத்து மன உளைச்சல்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ள ஆலோசனை, தன் திறன் வளர்த்தல், நினைவுத்திறனை மேம்படுத்த, வாழ்க்கை குறிக்கோள் அமைத்துக்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, ஆளுமை பயிற்சி முகாம்கள், கடந்த மார்ச் மாதம், செவிலிமேடு அரசினர் மேல்நிலை பள்ளியில் தேர்வு ஆலோசனை முகாம் நடத்தியது.
• கற்கை குறைபாடுகள், மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கு மாணவர்களுக்கு உதவ வேர்கள் உளவியல் ஆலோசனை மையம்,
• விழிப்புணர்வு மற்றும் தன் திறனறியும் பயிற்சி முகாம்கள், கிராமப்புற பெண்களுக்கு,
• மருத்துவ முகாம்கள் மற்றும், இரத்ததான உதவி, தேவைப்படும் எல்லோர்க்கும்,

வேண்டுகோள்:

ஒரு மாணவருக்கு கல்வி செலவுக்கு ரூ.1100/-, ஒரு இரவு பள்ளி ஆசிரியருக்கு மதிப்பூதியம் ரூ.500/- , போன்ற செலவுகளை, எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நோட்டு புத்தகங்கள் (200பக்கம் long size unruled, 200 பக்கம் short ruled), வழங்கலாம்.

தங்களுடைய உதவி தொகையை “Vergal Charitable Trust”, (payable at kancheepuram) என்ற பெயருக்கு டி.டி அல்லது காசோலையாகவோ வழங்கலாம்.

உதவுங்கள், எங்களோடு இந்த சிறிய சமூக பணியோடு இணைந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

வேர்கள் அறக்கட்டளைக்காக

தலைமை அறங்காவலர்/ அறங்காவலர்

தொடர்புக்கு:
நளினி: 94442 65711

அலுவலக முகவரி:
வேர்கள் அறக்கட்டளை,
42c, ஆலடி பிள்ளையார் கோவில் தெரு,
காஞ்சிபுரம்.
தமிழ்நாடு,
இந்தியா
பின்கோடு: 631501

உங்கள் சொற்களை சொல்க